வாக்கு எண்ணும் மையங்களை எச்சரிக்கையுடன் கண்காணிக்க அதிமுக தலைமை உத்தரவு!

Apr 07, 2021 03:40 PM 357

வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடன் 24 மணி நேரமும் விழிப்புடன் கண்காணிக்க அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அதிமுக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.


அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  திமுகவினரின் பல்வேறு முறைகேடுகளையும்,தில்லுமுல்லுகளையும் தாண்டி தமிழகத்தில் சுமூகமான வாக்குப்பதிவு நடைபெற முழு ஒத்துழைப்பு நல்கிய அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும், முகவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

வரும் மே மாதம் 2 ஆம் தேதி வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் அதிமுக வேட்பாளர்களும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களும், நிர்வாகிகளும், முகவர்களும் கவனத்துடன் இருக்கவேண்டும் என தெரிவித்துள்ளனர்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்

Comment

Successfully posted