இந்திலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த அதிமுக எம்.எல்.ஏ

Jun 01, 2021 09:08 PM 1232

கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் இந்திலி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் இந்திலி கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், மூன்று மாதத்திற்கும் மேலாக வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகள் அன்மையில் பெய்த மழையில் நனைந்து வீணாகின. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்த நிலையில் இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார், உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நெல் மூட்டைகள் வீணாவதால் விவசாயிகளுக்கு ஏற்படும் நஷ்டத்தை அறிந்து விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு கொள்முதல் நிலைய அதிகாரியிடம் வலியுறுத்தினார்.

இதை தொடர்ந்து, அடுத்த 10 நாட்களுக்குள் அனைத்து விவசாயிகளின் நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படும் என்று அதிகாரி உறுதியளித்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமாருக்கு நன்றி தெரிவித்தனர்.

Comment

Successfully posted