அதிமுக ஆட்சியில் தான் ஊடகங்களுக்கு அதிக சுதந்திரம் - அமைச்சர் எஸ்.பி வேலுமணி 

Oct 18, 2018 09:39 PM 645

அதிமுக ஆட்சியில் தான் ஊடகங்களுக்கு அதிக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக, உள்ளாட்சிதுறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கூறியுள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைவருக்கும் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

திமுக ஆட்சியில் ஊடகத்துறை யார் கட்டுப்பாட்டில் இருந்தது என அனைவருக்கும் தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.

கோவை மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளை ஆக்கிரமித்து வசிப்பவர்களுக்கு மாற்று வீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வேலுமணி கூறினார்.

மாற்று இடம் வழங்குவதில் விடுபட்ட 53 குடும்பங்களுக்கு தகுதி அடிப்படையில் இடம் வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

Related items

Comment

Successfully posted