அணை கட்டக்கூடாது அவ்ளோதான்: உறுதியான நிலைப்பாட்டில் அதிமுக

Jul 12, 2021 01:17 PM 612

மேகதாதுவில் கர்நாடகா அணைகட்டுவதற்கான பணிகளில் மும்முரமாக இருக்கும் நிலையில், இன்று தமிழக சட்டமன்ற அனைத்துக்கட்சிக் கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கிய தீர்மானங்களின்படி, தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக, மேகதாது அணைத் திட்டத்தை எதிர்க்க முடிவெடுத்துள்ளது. 

இந்நிலையில் அதிமுகவின் தனி நிலைப்பாடு என்ன என்பதை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெளிவுபடுத்தியுள்ளார்.

 

 “தமிழர் நலன், விவசாயிகள் நலன், டெல்டா நலன் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு செயல்படும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு அதிமுக எப்போதும் துணைநிற்கும். மேகதாதுவில் அணைகட்டுவதற்கான பூர்வாங்கப் பணிகளை கர்நாடகா தொடங்கியபோதே சட்டப்போராட்டம் நடத்தி வென்று, இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தியவர் அம்மா. ”

மொத்தத்தில், “கர்நாடகா மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடு”  என்று தெளிவுபடுத்தினார்.  

Comment

Successfully posted