”போலீசாரை தாக்கிய திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்”

Jun 08, 2021 09:19 AM 735

சென்னை ஐ.சி.எப். அருகே காவல்துறையினரை தாக்கிய திமுக பிரமுகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

வடபழனி, விருகம்பாக்கம், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன தணிக்கையை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும், மற்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், ICF-ல் கடந்த 2ஆம் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் அசோக் என்பவரை தாக்கிய திமுகவைச் சேர்ந்த மகேஷ், தமிழ்ச்செல்வன் மற்றும் வாசு ஆகிய மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.

 

Comment

Successfully posted