ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் செயல் அதிகாரி அர்ச்சனா நேரில் ஆஜர்

Feb 12, 2020 03:26 PM 907

நடிகர் விஜய் நடித்த பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி இன்று வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார்.


விஜய் நடித்த ‘பிகில்’ படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்தது. இந்த படம் ரூ.300 கோடி வருமானம் ஈட்டியதாக செய்திகள் பரவின. இதைத் தொடர்ந்து வருமானவரித் துறையினர், ஏ.ஜி.எஸ். நிறுவனத்துக்கு சொந்தமான திரையரங்குகள், அலுவலகங்கள், வீடுகள், நடிகர் விஜய்யின் வீடுகள் மற்றும் சினிமா பைனான்ஸியர் அன்புச்செழியனின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விஜய் உட்பட மூன்று பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அந்த வகையில் நேற்று விஜய்யின் ஆடிட்டர் வரிமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளித்த நிலையில், இன்று ஏ.ஜி.எஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியான அர்ச்சனா கல்பாத்தி, வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜரானார். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

Comment

Successfully posted