மீண்டும் திரையில் ஜோடி சேரும் ஜஸ்வர்யா-விஜய் சேதுபதி!

Jun 11, 2019 06:06 PM 541

விஜய் சேதுபதியும் ஐஸ்வர்யா ராஜேஷும் ரம்மி,பண்ணையாரும் பத்மினியும்,தர்மதுரை ஆகிய மூன்று படங்கள் இணைந்து நடித்துள்ள நிலையில்,தற்போது 4வது படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.இப்படத்திற்கான பூஜை நேற்று தொடங்கியது.

image

இப்படத்தினை பி.விருமாண்டி இயக்குகிறார்.அறம் படத்தை தயாரித்த கே.ஜே.ஆர்.ஸ்டியோஸ் இப்படத்தினை தயாரிக்கிறது.கதாநாயகியை மையமாக கொண்டு எடுக்கப்படும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இப்படத்திற்கு ’க/பெ.ரணசிங்கம்’ என பெயரிடப்பட்டுள்ளது.

image

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் சிறப்பு தோற்றம் வித்தியாசமாக இருந்ததால் இந்த படத்திலும் அவரின் சிறப்பு தோற்றம் வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Comment

Successfully posted