"விஸ்வாசம்" பொங்கல் ரிலீஸ் !

Oct 16, 2018 12:35 PM 660

நடிகர் அஜித்குமாரின் 59-வது படமாக உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தின் வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. இப்படத்தை சிவா இயக்கி வருகிறார்.

தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர். அஜித்குமார் இரு வேடங்களில் நடிக்கும் தோற்றங்களை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.

இதன் படப்பிடிப்பை 4 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய போது தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று கூறப்பட்டது. ஆனால் திரையுலகினர் போராட்டத்தினால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்பட்டு தள்ளிப்போனது.

அஜித்குமார், நயன்தாரா பங்கேற்று நடித்து வரும் பாடல் காட்சிகள் பூந்தமல்லி அருகே உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் நடைபெற்று வருகிறது.

ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையில் விஸ்வாசம் படம் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted