மாஸ் காட்டும் குட்டி தலயின் வைரல் போட்டோ..

Feb 18, 2020 01:04 PM 1713

சினிமாவில் நாளுக்கு நாள் எத்தனையோ ஹீரோக்கள் அறிமுகமானாலும் தல அஜித்திற்கு இருக்கும் மவுஸ் குறைவதில்லை.திரைத்துறையில் தல அஜித்தை கொண்டாடும் ரசிகர்கள், அவரின் நிஜ வாழ்க்கையில் அவருக்கு விருப்பப்பான  கார் ரேஸ், தூப்பாக்கி சூடு ஆகிய விளையாட்டுகள் மீது அவர் வைத்திருக்கும் ஈடுபாட்டையும் பாராட்டி வருகின்றனர்.

என்னதான் தல அஜித்துக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்தாலும், அவர் பெரும்பாலும் ரசிகர்களிடம் சமூக வலைதளங்கள் மூலம் உரையாடுவதோ அல்லது நேரடி தொடர்பினையோ வைத்துக்கொள்வதில்லை.இவர் பெரும்பாலும் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொள்வதே  அறிதானது.அதே போல் தல அஜித் பொது நிகழ்ச்சிகளுக்கு குடும்பத்துடன் செல்வதை தவிர்த்துவிட்டார்.சில நேரத்தில் ஆத்விக் மற்றும் அனுஷ்காவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகும்.
image
அதே போல் தற்போது குட்டி தல ஆத்விக் தனது அம்மா மற்றும் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படம்  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.மேலும் அஜித் வலிமை படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted