அமேசான் ஓனரின் போனை ஹேக் செய்த சவுதி இளவரசர்

Jan 22, 2020 11:44 AM 998

பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானின் ஓனர் ஜெப் பெஸோஸ் போனை வாட்ஸ்அப் மூலம் சவுதி இளவரசர்  ஹேக் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் உலக பணக்காரர் பட்டியலில் முதலிடம் பிடித்த அமேசான் ஓனர் ஜெப் பெஸோஸ் அமெரிக்காவின் பிரபல நாளிதழான “வாஷிங்டன் போஸ்ட்” -க்கும் சொந்தகாரர். இவரது நாளிதழில் எழுதப்படும் கட்டுரைகளால் பல நாட்டு தலைவர்களும் இவர் மீது கோபத்தில் இருந்தனர். அதில்  சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மானும் ஒருவர்.

ஏற்கனவே வாஷிங்டன் போஸ்ட்டில் சவுதி இளவரசர் குறித்த கட்டுரைகளை எழுதி வந்த ஜமால் கசோக்கியை முகமது பின் சல்மான் கொடூரமாக கொன்றார். இந்நிலையில் தற்போது ஜெப் பெஸோஸ் போனை சவுதியின் இளவரசர் முகமது பின் சல்மான்  வாட்ஸ்அப் மூலம் ஹேக் செய்துள்ளார்.

மேலும் ஹேக் செய்து அதிலிருந்து திருடப்பட்ட தகவல்கள் தான் ஜெப் பெஸோஸ் திருமண வாழ்க்கை முறிவுக்கும் காரணம் என தெரிய வந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக துப்பறிந்து ஜெப் பெஸோஸ் போனை சவுதி அரசு தான் ஹேக் செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted