ரசிகர்களுக்கு கோடி நன்றிகள் சொன்ன அனிருத்..

Feb 16, 2020 02:51 PM 1075

அனிருத் இசை என்றாலே ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என்று கூறலாம். அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கு சொல்லவே தேவையில்லை. ஒரு படம் வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான ஒன்று படத்தில் அமைந்திருக்கும் இசையும் தான். அந்த வகையில் அனிருத் இசையமைத்த அனைத்து படங்களுமே ஹிட் என்றுதான் கூறவேண்டும்.

சமீபத்தில் காதலர் தினத்தன்று அனிருத் இசையில் விஜய் பாடிய 'ஒரு குட்டி கதை' பாடல் வெளியானது. வெளியான ஒரு நாட்களிலேயே 9 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது. மேலும் ஒரு மில்லியன் லைக்குகளையும் youtube பக்கத்தில் பெற்றுள்ளது. இந்த பாடலை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஆனால் சிலர் இந்த பாடலை வடிவேலு ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளிவந்த ராஜகாளியம்மன் படத்தில் இடம்பெற்றுள்ள 'சந்தன மல்லிகையில்: என்ற பாடலை போலவே இருப்பதாக விமர்சித்து வருகின்றனர்..

இந்நிலையில் அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 'தளபதி விஜய் பாடிய 'ஒரு குட்டி ஸ்டோரி பாடலுக்கு ஒரு கோடி அன்பினை தந்தவர்களுக்கு நன்றி. அருண் ராஜா காமராஜுக்கும் நன்றி.இந்த பாடலுக்கு இத்தனை பெரிய வெற்றி கொடுத்த அனைவருக்கும் கோடி நன்றிகள் என்று பதிவிட்டுள்ளார்.

image

Comment

Successfully posted