தர்பார் படத்தின் அப்டேட் - வெளியிட்டார் அனிருத்

Oct 16, 2019 03:34 PM 513

தனது பிறந்த நாளை முன்னிட்டு இசையமைப்பாளர் அனிருத் தர்பார் படத்தின் அப்டேட்டை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாக உள்ள “தர்பார்” படத்தில் ரஜினி மற்றும் நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. 2020 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ள தர்பார் திரைப்படத்தை பற்றி நாளுக்கு நாள் அப்டேட்கள் வந்தவண்ணம் உள்ளன.

image

ஏற்கனவே தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் அடுத்த அப்டேட் எப்போது? - என ரஜினி ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தார்கள். இந்நிலையில் அந்தப் படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட்ட டுவிட்டில், தர்பார் படத்தின் மோஷன்போஸ்டர் அதன் தீம் மியூசிக்குடன் வரும் நவம்பர் 7 ஆம் தேதி வெளிவரும் என சொல்லி ரஜினி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்துள்ளார். தர்பார் படத்தின் இந்த புதிய அப்டேட் டுவிட்டர் டிரண்டிங்கில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted