அண்ணா பல்கலையின் 560 பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு - 5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி வருகின்றனர்

Nov 10, 2018 03:46 PM 390

அண்ணா பல்கலைகழகத்தின்கீழ் செயல்படும் 560 பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வு துவங்கியுள்ளது. அண்ணா பல்கலைகழகத்தின் கீழ் 560 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. கடந்த முறை நடைபெற்ற அண்ணா பல்கலைகழக தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 560 பொறியில் கல்லூரிகளுக்கு செமஸ்டர் தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதி வருகின்றனர். பல்வேறு கண்காணிப்புகளுக்கு மத்தியில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மாத இறுதி வரை இந்த தேர்வு நடைபெறவுள்ளது. இதையடுத்து உயர்மட்ட குழுவின் கண்காணிப்பில் தேர்வுத்தாள்கள் திருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

 

Comment

Successfully posted