டெங்குவைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு மாரத்தான் - ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்பு

Nov 11, 2018 05:57 PM 546

சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தாலே டெங்கு, பன்றிக் காய்ச்சல் உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்தலாம் என, அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா தெரிவித்துள்ளார்.

டெங்கு உள்ளிட்ட நோய்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு மாரத்தான் போட்டி, சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.

பசுமை மற்றும் தூய்மையை வலியுறுத்தி நடைபெற்ற இந்த மாரத்தானில், ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்துகொண்டனர். அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா, இந்த மாரத்தான் போட்டியை துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருந்தாலே டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என தெரிவித்தார்.

 

 

Comment

Successfully posted