திருவாரூர், நாகை, புதுக்கோட்டையில் தேர்வுகள் ஒத்தி வைப்பு - அண்ணா பல்கலைக் கழகம் அறிவிப்பு

Nov 21, 2018 08:42 PM 430

திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைகழகம் அறிவித்துள்ளது.

கஜா புயல் தாக்கியதில் நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இந்த புயலினால் உயிரிழப்புகள் ஏற்பட்டதுடன் வீடுகள், பயிர்கள் சேதமடைந்தன.

பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தற்போது நிவாரண பணிகள் நடைபெற்று வரும் நிலையில், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளையும், நாளை மறுதினமும், நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 3 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.Comment

Successfully posted