அண்டார்டிகாவில் செவ்வக வடிவ பனிப்பாறை - வியப்பில் நாசா

Oct 27, 2018 10:26 PM 348

நாசா மர்மம் நிறைந்த பல விஷயங்களுக்கு விடை தேடி கொண்டிருக்கிறது. தற்போது அண்டார்டிகா பகுதியில் கடலின் நடுவில் மிதந்துவரும் செவ்வக வடிவ மாபெரும் பனிப்பாறை ஒன்றின் புகைப்படத்தை அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெளியிட்டிருக்கிறது.

ஆய்வு விமானம் ஒன்றின் மூலம் இந்தப் செவ்வக பனிப்பாறையினை படம் எடுத்துள்ளனர். அந்தப் பனிப்பாறையை பார்க்கும் போது அது கூர்மையான கோணங்களும், தட்டையான மேற்பரப்பும் கொண்டதாக இருப்பதால் அந்தப் பனிப்பாறை சமீபத்தில்தான் துண்டாகி வந்திருக்கலாம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அண்டார்டிகாவில் லார்சன்-சி பனி அடுக்கில் இருந்து பிரிந்து வந்திருக்கும் அந்தப் பாறையின் முனைகள் இன்னும் கடல் அலைகளால் மழுங்கடிக்கப்படாமல் அப்படியே கூர்மையாவே உள்ளது.

"விரல் நகங்கள் நீளமாக வளர்ந்தால், முனையில் இருக்கும் நகத்தின் பகுதி ஒடிந்து விழுவதை போலவே இந்தப் பனிப்பாறைகளும் துண்டாகி விழுகின்றன," என்கிறார் நாசா மற்றும் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் பனிப்பாறைகள் குறித்து ஆராயும் கெல்லி ப்ரண்ட். பெரும்பாலும் அவ்வாறு விழும் பனிப்பாறைகள் முறையான வடிவங்களை பெற்றிருக்கும் என்கிறார் அவர். இந்தப் பனிப்பாறை சதுர வடிவத்தில் இருப்பதே மற்ற பனிப்பாறையில் இருந்து மாறுபாடக் காரணம் என்கிறார் கெல்லி.

இந்த செவ்வக பனிப்பாறையின் அகலம் சுமார் 1.6 கிலோ மீட்டர் தூரம் இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இன்னும் தொடர்ந்து இந்த செவ்வக பனிப்பாறையை வைத்து கொண்டு ஆராய்ச்சிகள் செய்து வருகின்றனர்.

Related items

Comment

Successfully posted