நீங்கள் பெண் சாதனையாளரா? வாட்ஸ் அப் அனுப்புங்கள்..மேடை ஏறுங்கள்...

Feb 15, 2019 06:48 PM 750

பெண்ணானவள் ஒரு மெழுகுவர்த்தி போல்,தான் உருகி தன்னை சுற்றி இருப்பவர்களுக்கு வெளிச்சம் தருபவள்.பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறன் உள்ளவள்.நகரத்தில் உள்ள பெண்களும் சரி கிராமங்களில் உள்ள பெண்களும் சரி தனது கடமையை செய்ய ஒரு போதும் தவறுவதே இல்லை.நம் நாட்டில் சாதனையின் உச்சத்தை தொட்ட பெண்களும் இருக்கிறார்கள்,திறமை அதிகமாக இருந்தாலும் அதனை வெளிகாட்ட முடியாமல் குடும்ப சூழ்நிலைக்காக தன் லட்சியத்தை மறைத்து கொண்டு வாழும் பெண்களும் உள்ளனர்..

ஒரு குழந்தை தான் நாளைய சமுதாயமாக மாறும்.அந்த குழந்தையை வளர்க்கும் பெரும் பொறுப்பானது பெண்களுக்கே அதிகமாக உள்ளது.நீங்கள் உங்கள் வீட்டு பெண்ணுக்கு முக்கியவத்துவம் அளிப்பதை பொறுத்தே அவள் அடுத்த சமுதாயத்தை உருவாக்குவாள்.பெண்கள் என்றும் அன்பிற்கு அடிமை என்று சொன்னால் மிகையாகாது. அதே நேரத்தில் வலிமையான உள்ளமும் ,அதீத அறிவும் படைத்தவள்.

தன் பிறந்த வீட்டில் இருக்கும் போது தனது பெற்றோர்களை விட்டு தரமாட்டாள்,திருமணம் ஆன பிறகு தனது கணவனை விட்டு தரமாட்டாள்,குழந்தை பிறந்த பிறகு குழந்தையை விட்டுதரமாட்டாள்..இப்படி தனது வாழ்நாளில் மற்றவர்களை பற்றியே யோசிக்கும் அவளின் ஆசையை நிறைவேற்ற கரம் கொடுக்கிறது நியூஸ் ஜெ தொலைக்காட்சி.வாருங்கள் சேர்ந்து கரம் கொடுப்போம்..

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் உங்கள் வீட்டிற்கு அருகில் சத்தமில்லாமல் சாதனை புரியும் பெண்களின் தகவல்களை editor@newsj.tv என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள் அல்லது 9498079911 என்ற எண்ணிற்கும் வாட்ஸ் அப் மூலம் தகவல்களை அனுப்பலாம்.இல்லையென்றால் நியூஸ் ஜெ தொலைக்காட்சி,எண் 9 மோகன் குமாரமங்கலம் சாலை,நுங்கம்பாக்கம்,சென்னை-600034 என்ற முகவரிக்கும் அனுப்பலாம். அந்த சாதனையாளருக்கு மேடை அமைத்து தருகிறது நியூஸ் ஜெ தொலைக்காட்சி.பெண்களை போற்றுவோம் ! அவர்களின் சாதனைகளுக்கு துணைபுரிவோம் !

image

Comment

Successfully posted