8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி - வடமாநில இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது

Oct 19, 2018 02:28 PM 349

சென்னையில் எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வடமாநில இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

சென்னை சேப்பாக்கம் மியான் சாகிப் தெருவில் உள்ள பெங்கால் மேன்சனில், வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தங்கி, பணியாற்றி வருகின்றனர். ஒரிசாவைச் சேர்ந்த மாணிக் சிங் என்ற இளைஞரும் அங்கு தங்கி, உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

அதே மேன்சனில் ஒரிசாவைச் சேர்ந்த ஒரு குடும்பமும் தங்கியுள்ளது. இந்நிலையில், அந்த மேன்சனில் தங்கியுள்ள ஒரிசாவைச் சேர்ந்த எட்டு வயது சிறுமியை, மாணிக்சிங், தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்ட அருகில் இருந்தவர்கள், குழந்தையை மீட்டதுடன், மாணிக் சிங்கை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, மாணிக் சிங் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Comment

Successfully posted