ஆர்யாவுக்கும்-சாயிஷாவுக்கும் டும்..டும்..டும்..முடிந்தது !

Mar 11, 2019 11:03 AM 471

பல நாளாக ஆர்யாவுக்கு எப்ப தாங்க கல்யாணம் பண்ணுவிங்க என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.கடந்த ஆண்டு எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சி மூலம் ஆர்யா தனது கல்யாணத்திற்கு பொண்ணு பார்ப்பதாக கூறியிருந்தார்.அந்த நிகழ்ச்சியில் 16 பெண்கள் கலந்து கொண்டாலும் ஆர்யாவின் மனசில் யாரும் இடம் பிடிக்கவில்லை..அந்த நிகழ்ச்சியும் முடிந்தது.ஆர்யாவின் வாழ்க்கையும் கேள்வி குறியானது.

பின்பு சில நாட்களுக்கு பிறகு கஜினிகாந்த் திரைப்படத்தில் ஆர்யாவும் சாயிஷாவும் ஜோடியாக நடிக்க, அவர்களுக்குள் காதலும் மலர்ந்தது.அவர்கள் இருவரின் வீட்டிலையும் பச்சை கொடி தான்..பிறகு பிப்ரவரி 14 ஆம் தேதி ஆர்யா சாயிஷாவை திருமணம் செய்துகொள்ள போவதாக ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.மார்ச் 9,10 ஆம் தேதிகளில் அவர்களின் திருமணம் முடிவாகியுள்ளது எனவும் கூறியிருந்தார்.

பின்னர் இருவரும் பொறாமை படும் அளவிற்கு காதல் ஜோடியாக வலம் வந்தனர்.சில நாட்களிலே கல்யாணமும் நெருங்கியது.. சங்கீத் நிகழ்ச்சியில் மணப்பெண் சாயிஷா நடனமாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜூன் வந்து இருவரையும் வாழ்த்தியுள்ளார்.மேலும் ஹிந்தி பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

image

image

 

நேற்று அவர்களின் கல்யாணமும் ஹைதரபாத்தில் கோலாகலமாக நடந்து முடிந்தது.சூர்யா,கார்த்தி என திரைபிரபலங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தியுள்ளனர்.நடிகை-நடிகைகள் இந்த புதுமண தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்..

 

 

 

Related items

Comment

Successfully posted