ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

Jun 20, 2021 08:20 AM 384

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர், ஆளுநர் உரையுடன் நாளை தொடங்குகிறது.

16வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர், சென்னை கலைவாணர் அரங்கில், நாளை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. சபாநாயகர் அப்பாவு, சட்டசபை செயலாளர் சீனிவாசன் ஆகியோர், ஆளுநர் பன்வாரிலாலை சட்டசபை மரபுப்படி சட்டசபைக்குள் அழைத்துவருவார்கள். கூட்டம் தொடங்கியதும், ஆளுநர் தனது உரையை நிகழ்த்துவார். இதனைத் தொடர்ந்து அவை நிகழ்ச்சிகள் முடிவடையும். அதன்பின்னர், சட்டசபைக் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் சபாநாயகர் தலைமையில் நடைபெறும். கொரோனா பரிசோதனை செய்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே சட்டபையில் அனுமதி என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted