இந்த ஆண்டுக்கான ஆத்மாநாம் நினைவு விருதுகள்

Oct 18, 2018 11:07 AM 232

இந்த ஆண்டுக்கான ஆத்மாநாம் நினைவு விருது கவிஞர் போகன் சங்கர் மொழிபெயர்ப்பாளர்கள் கார்த்திகை பாண்டியன், அனுராதா ஆனந்த் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளது. 

கவிஞர் ஆத்மாநாம் நினைவாக ஆண்டுதோறும் கவிஞர்கள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டுக்கான விருதுபட்டியல் வெளியாகி உள்ளது. இதில் கவிஞர் பிரிவில் போகன் சங்கரும், மொழிபெயர்ப்பாளர்கள் பிரிவில் கார்த்திகை பாண்டியன் மற்றும் அனுராதா ஆனந்த் ஆகியோரும் விருது பெறுகின்றனர்.

வரும் 20-ந் தேதி சென்னை மயிலாப்பூரில் இவ்விழா நடைபெற உள்ளது. மராத்திய கவிஞரும், பேராசிரியருமான சந்திரகாந்த் பாட்டீல் கலந்து கொண்டு விருதுகளை வழங்குகிறார். விழாவில் எழுத்தாளர்கள் பெருமாள் முருகன், அழகிய பெரியவன், மொழிபெயர்ப்பாளர்கள் அசதா, ஸ்ரீராம் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

Comment

Successfully posted