#அய்யோஅம்மாஆடியோலான்ச் - ட்விட்டரில் விஜய் ரசிகர்கள் கோபம்

Sep 20, 2019 06:08 PM 1362

நடிகர் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம் “பிகில்”. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க அட்லி இயக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான விஜய் ரசிகர்கள் காலை முதலே விழா நடைபெறும் அரங்கத்திற்கு வந்தனர். ஆனால் பிற்பகலுக்கு மேல் “Entry pass” வைத்திருந்த ரசிகர்களை காவல்துறையினர் உள்ளே விடவில்லை என பிரச்சனை எழுந்தது. மேலும் கூட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் தடியடி நடத்தியதாகவும் கூறப்பட்டது. இதனால் விழா ஏற்பாட்டாளர்கள் மீது அவரது ரசிகர்கள் கடும் அதிருப்தியடைந்தனர்.

image

இந்நிலையில் ட்விட்டரில் இன்றைய தினம் #அய்யோஅம்மாஆடியோலான்ச் என்ற hashtag ட்ரெண்டானது. அதில் நேற்று பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடந்த தடியடி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களை குறித்த வீடியோக்கள், மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகின்றன.

Comment

Successfully posted