அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் - தமிழ்நாடு அரசு

Nov 22, 2020 03:17 PM 475

தமிழ்நாட்டில், நவம்பர் 25ஆம் தேதி முதல் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு  அரசாணை வெளியிட்டுள்ளது.

அந்த அரசாணையில், 50 சதவீத இருக்கைகளுடன் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தலாம் என்றும், இந்த நிகழ்ச்சிகளில் 200 பேர் வரை கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அனைவரும் கட்டாய முகக் கவசம் அணிந்து பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களுக்கு உடல்வெப்பநிலை பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், உரிய பாதுகாப்பு இடைவெளியுடன் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, அரசியல் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted