எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற ரிசர்வ் வங்கி வாரியக் கூட்டம் - கூட்டத்தில் சுமூக முடிவு

Nov 20, 2018 06:32 AM 335

ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் உரசல் நீடித்து வந்த நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிசர்வ் வங்கி வாரியக் கூட்டம் சுமூகமாக நிறைவு பெற்றது.


சமீப காலமாக மத்தியஅரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையிலான உரசல்கள் வெளிப்படையாகத் தெரியத் தொடங்கியது. இந்நிலையில், ரிசர்வ் வங்கி வாரியக் கூட்டம் மும்பையில் நடைபெற்றது.

இதில், ரிசர்வ் வங்கி ஆளுநர் மற்றும் துணை ஆளுநர்கள் பங்கேற்றனர். மத்திய அரசு சார்பில் பொருளாதார விவாகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க், நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார், உறுப்பினர் எஸ்.குருமூர்த்தி, டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

9 மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு சுமூக முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comment

Successfully posted