கருத்து வேறுபாட்டால் 8 ஆண்டுகளாக நடைபெறாத கோவில் திருவிழா

Jul 23, 2019 10:57 AM 43

உதகை அருகே கீழ்குந்தா பகுதியில் இருப்பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 8 ஆண்டுகளாக நடைபெறாமல் இருக்கும் ஹெத்தை அம்மன் திருவிழாவை நடத்த வேண்டுமென படுகர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அருகே அமைந்துள்ள கீழ்குந்தா மற்றும் அதனை சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமப் பகுதியில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டல் இரு பிரிவுகளாக பிரிந்துள்ளனர். இதனால் 8 ஆண்டுகலமாக ஹெத்தை அம்மன் திருவிழா நடைபெறவில்லை என தெரிவித்தனர். மாவட்ட ஆட்சியர் தலையிட்டு அமைதி பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்து தர வேண்டும் என படுகர் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comment

Successfully posted