பிக்பாஸ் பிரபலம் முகெனின் தந்தை திடீர் மரணம்

Jan 28, 2020 02:38 PM 1517

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் வெற்றியாளரான முகெனின் தந்தை மரணமடைந்ததை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.இதில் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, மலேசியா பாடகரான முகென் ராவும் கலந்துகொண்டார்.இவர்கள் நாடு விட்டு நாடு வந்து ஒரு போட்டியில் கலந்துக்கொண்டாலும் தமிழ் மக்களிடம் இவர்களுக்கு கிடைத்த வரவேற்பு அளவற்றது.பின்பு கடுமையாக போட்டியில் பங்கேற்ற முகென் ராவ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் டைட்டிலை தட்டி சென்றார்.

100 நாட்கள்  கழித்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த முகென் ராவை ரசிகர்கள் கொண்டாட தொடங்கினர்.இந்நிலையில் நேற்று உடல்நிலை சரியில்லாத காரணத்தால் முகென் ராவின் தந்தை மரணமடைந்துள்ளார்.இதற்கு சேரன் , வனிதா உள்ளிட்ட பிக்பாஸ் பிரபலங்கள் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

 

 

Comment

Successfully posted