இன்று பிக்பாஸ் வீட்டில் முகெனுக்கு இன்ப அதிர்ச்சி...

Sep 10, 2019 04:54 PM 312


இன்று பிக்பாஸ் வீட்டின் 79வது நாள்.பிக்பாஸ் வீட்டில் நடப்பது அனைத்தையும் சீக்ரெட் அறையில் இருந்தபடி சேரன் ஒருபுறம் கண்காணித்து கொண்டு இருக்க, நேற்று கவினும் லாஸ்லியாவும் பிக்பாஸ் வீட்டில் பேசமாட்டோம் என்று சொல்லிய விஷயத்தை மீண்டும் பேசினர்.இதை கவனித்த சேரன் பிக்பாஸிடம் சொல்லிவிட்டார்.

இன்றைய பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களுக்கு freeze டாஸ்க் கொடுக்கப்பட்டது.அப்போது அனைவருக்கும் freeze என பிக்பாஸ் சொல்ல, அனைவரும் அசையாமல் நின்ற போது முகெனின் அம்மா உள்ளே வருகிறார்.அதனை கண்ட முகென் அழுதுக்கொண்டே ஓடிச்சென்று கட்டி தழுவுகிறார்.முகெனின் முகத்தில் இருக்கும் சந்தோஷத்தை பார்த்த அனைவரும் சந்தோஷத்தில் இருக்க முகெனின் தங்கையும் வீட்டிற்குள் வர சந்தோஷத்தின் உச்சத்திற்கு செல்கிறார் முகென்.

எனவே இந்த வாரம் முழுவதும் போட்டியாளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.நிச்சயம் இந்த வார பிக்பாஸ் வீட்டில் பல நெகிழ்ச்சி தருணங்கள் நிகழ உள்ளது.

 

Comment

Successfully posted