மோடியை வீழ்த்த அத்வானி ஆர்வமாக உள்ளார் - காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்

Nov 10, 2018 04:14 PM 905

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, மோடியை கவிழ்க்க மிகுந்த ஆர்வமுடன் இருப்பதாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 4 ஆண்டுகளில் மோடியின் செல்வாக்கு குறைந்துள்ளதாக கூறினார். பாஜகவில் யஷ்வந்த் சின்கா, சுப்ரமணியன் சுவாமி போன்ற தலைவர்களே மோடியை வீழ்த்தி விடுவார்கள் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார்.

மக்களவை தேர்தலில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டிய அவர், வரும் தேர்தலுடன் மோடியின் பயணம் முடிவடைய உள்ளதாகவும் தெரிவித்தார்.

பாஜகவிற்கு எதிராக பல்வேறு கட்சிகள் காங்கிரசுடன் இணைந்து தேர்தலை சந்திக்க இருப்பதாக திருநாவுக்கரசர் கூறினார்.Comment

Successfully posted