புதுச்சேரி: சட்டப்பேரவை சபாநாயகராக பாஜக செல்வம் தேர்வு.

Jun 15, 2021 12:10 PM 1130

புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாஜகவை சேர்ந்த செல்வம் நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். புதுச்சேரி சட்டப்பேரவை சபாநாயகருக்கான தேர்தல் நாளை நடைபெற இருந்த நிலையில் இன்று பிற்பகல் 12 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்தது.

சபாநாயகர் தேர்தலில் போட்டியிட பாஜகவை சேர்ந்த செல்வம் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்து இருந்ததால் அவர் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார் மேலும் நாளை காலை கூடவுள்ள சட்டசபை கூட்டத்தில் சபாநாயகராகவும் பதவி ஏற்க உள்ளார்.

Comment

Successfully posted