நீங்க அனுமதி தரலனா என்ன? நாங்க கொண்டாடுவோம்!

Sep 05, 2021 05:09 PM 759

விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு அனுமதி கொடுக்கமால் தமிழக அரசு பிடிவாதமாக இருக்க காரணம் என்ன என்பது தெரியவில்லை என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சுதந்திரப்போராட்ட வீரர் வ.உ.சியின் 150வது பிறந்தநாள் விழாவையொட்டி, நெல்லை டவுனில் உள்ள அவரது மணி மண்டபத்தில் உள்ள சிலைக்கு பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தமிழக அரசு அனுமதி தராத நிலையில்,

பாஜக தொண்டர்கள் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் விநாயகர் சிலைகளை வீடுகள் முன்பு பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்துவார்கள் என தெரிவித்தார்.

Comment

Successfully posted