வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் ஹீரோயினா ?

Dec 09, 2019 05:11 PM 976

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த படம் தான் நேர்கொண்ட பார்வை. இந்தியில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த பிங்க் திரைப்படத்தின் ரீமேக் தான் இது.இந்த படத்தை போனிகபூர் தயாரித்தார்.

அஜித்தின் அடுத்த படமான வலிமை படத்தையும் வினோத் இயக்க, போனி கப்பூர் தயாரிக்க உள்ளார்.வலிமை படத்தை பற்றிய தகவல்கள் கசிந்து வரும் நிலையில் தற்போது படத்தின் படப்பிடிப்பு வரும் 13ம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் தொடங்க உள்ளது என கூறப்படுகின்றது.

மேலும் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை நடிக்க உள்ளார் எனவும் பேசப்பட்டு வருகின்றது .விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வலிமை படத்தில் இவர்களின் மூவரின் கூட்டணி வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Comment

Successfully posted