நீச்சல் பயிற்சியின்போது சிறுவன் உயிரிழப்பு - கண நேரத்தில் நேர்ந்த துயரம்!

Sep 28, 2020 09:44 AM 2100

நாமக்கல் அருகே, நீச்சல் பயிற்சி அளிக்கும் போது தந்தையின் கண் முன்னே சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, வெண்ணந்தூர் மதியம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளியான அய்யனர் தன்னுடைய இரண்டு மகன்களுக்கு தோட்டத்திலுள்ள கிணற்றில் நீச்சல் பயிற்சி அளித்துள்ளார். இதில், எதிர்பாராதவிதமாக அய்யனாரின் இரண்டு மகன்களும் நீரில் மூழ்கினர். அதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அய்யனார், கிணற்றில் குதித்து இளைய மகனான சஞ்சயை காப்பாற்றினார்.

மூத்த மகனான தீபன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த திருச்செங்கோடு தீயணைப்புத் துறையினர், சிறுவன் தீபனின் உடலை மீட்டனர். சம்பவம் தொடர்பாக வெண்ணந்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted