சென்னை வழக்கறிஞர் படுகொலை - 8 பேரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி

Oct 15, 2020 10:07 AM 1062

சென்னை வில்லிவாக்கத்தில் வழக்கறிஞர் ராஜேஷ் கொல்லப்பட்ட சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 8 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வழக்கறிஞர் ராஜேஷ் கடந்த 4ஆம் தேதி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக, வாணியம்பாடி நீதிமன்றத்தில் சரணடைந்த முருகேசன், ரமேஷ், அருண், உள்ளிட்ட 8 பேர் வாணியம்பாடி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், குற்றவாளிகள் 8 பேரையும் வில்லிவாக்கம் போலீசார் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த 13 வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ணன். 8 பேரையும், 4 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி அளித்து, வரும் 18 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

Comment

Successfully posted