விண்ணப்பக் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் - அதிமுக தலைமை அறிவிப்பு

Nov 22, 2020 03:28 PM 502

மாநகராட்சி மேயர், நகர மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட விண்ணப்பித்தவர்கள், நாளை முதல் விண்ணப்பக் கட்டணத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் நடைபெறவிருந்த நிலையில், பதவிகளுக்காக கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் 15-ம் தேதி முதல் டிசம்பர் மாதம் வரை விருப்ப மனுக்கள் பெற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்தல்கள் நடைபெறாத நிலையில் மேயர், நகர மற்றும் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு போட்டியிட விருப்ப மனு அளித்திருந்தவர்கள், விண்ணப்பத் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் 21-ம் தேதி அறிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், பலர் தங்களது கட்டணத்தை பெற்றுச் சென்றது அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கண்ட பதிவிகளுக்கு விருப்ப மனு அளித்து, விண்ணப்பத் தொகையை திரும்பப் பெறாதவர்கள், வரும் 23-ம் தேதி முதல், அடுத்த மாதம் 15-ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அசல் ரசீதுடன் தலைமைக் கழகத்திற்கு நேரில் வந்து, விண்ணப்பத் தொகையை பெற்றுக் கொள்ளலாம் என்றும், இந்தக் காலக்கெடு மீண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Comment

Successfully posted