திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களை காத்திருப்பு மண்டபங்களில் அடைத்து வைக்கும் முறை ரத்து

Mar 15, 2020 08:14 AM 542

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மார்ச் 17-ம் தேதி முதல் திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களை காத்திருப்பு மண்டபங்களில் அடைத்து வைக்கும் முறை ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆந்திரமாநிலம், திருமலை திருப்பதியில்  தேவஸ்தான நிர்வாக அதிகாரி அனில் குமார் சிங்கால் உடனான செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய அவர், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, இம்மாதம் 17ஆம் தேதி முதல் திருப்பதியில் உள்ள காத்திருப்பு மண்டபங்களில்  பக்தர்களை அடைத்துவைத்து தரிசனத்திற்கு அனுப்பி வைக்கும் முறை ரத்து செய்யப்படுவதாகக்  தெரிவித்தார். மேலும், பக்தர்களுக்கு வழங்கப்படும்  டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அவர் விளக்கமளித்தார்.  நாட்டு மக்கள் ஆரோக்கியத்துடனும், சுபிட்சமாக வாழவேண்டும் என்பதற்காக இம்மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை திருப்பதி மலையில் உள்ள பாரிவேட்டை மண்டபத்தில் தன்வந்திரி மகா யாகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted