திருக்கார்த்திகை திருவிழா: சுவாமிமலை கோயிலில் நடைபெற்ற தேரோட்டம்

Dec 10, 2019 03:13 PM 245

திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு சுவாமிமலை கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

அறுபடை வீடு கோயில்களில் நான்காம் படைவீடாக கருதப்படும் கும்பகோணம் அருகில் உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் திருக்கார்த்திகை திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர், திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Comment

Successfully posted