வேகமெடுக்கும் வழக்கு - சிக்கலில் கருணாஸ்

Oct 11, 2018 07:19 PM 320

கருணாஸ் மீதான வழக்கில், 2 மாதங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு பூலித்தேவன் நினைவு நாளில் மரியாதை செலுத்த சென்ற கருணாஸுக்கும் , மற்றொரு அமைப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது.

இதில் இரு தரப்பினரின் கார் கண்ணாடிகளும் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக கருணாஸ் தரப்பைச் சேர்ந்த 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் கருணாஸ் முன் ஜாமின் பெற்றுள்ளார்.

இதனிடையே இந்த சம்பவத்தில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி கருணாஸ் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் , வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டது. மேலும் இவ்வழக்கில் 2 மாதங்களில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related items

Comment

Successfully posted

Super User

சட்டமன்ற உறுப்பினர் பதவியை ரத்து செய்க


Super User

நல்லது நடந்தால் சரி