துரைமுருகன், கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு!

Apr 05, 2021 09:49 PM 595

பணப்பட்டுவாடா புகாரின் அடிப்படையில், காட்பாடி தொகுதி திமுக வேட்பாளர் துரை முருகன் மீது திருவலம் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதே போல், வாட்ஸ் அப்பில் மிரட்டும் தொனியில் பேசியது தொடர்பாக திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.நேரு மீதும் 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனிடையே, தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுகவினர் வன்முறையை தூண்ட முயற்சிப்பதாக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது. குறிப்பிட்ட வாக்குச்சாவடிகளில் மத்திய ரிசர்வ் படையின் பாதுகாப்பை அதிகரிப்பதுடன், சிசிடிவியை பொருத்தவும் அந்த புகார் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted