மனைவிக்கும் தோழிக்கும் திருமணம்; குழந்தைகளை நரபலியிட திட்டம் - விபரீதமாகும் அதீத கடவுள் நம்பிக்கை!

Apr 14, 2021 11:14 AM 304

அதீத கடவுள் நம்பிக்கையால் கட்டிய மனைவிக்கும், அவரது தோழிக்கும் திருமணம் செய்து வைத்து, குழந்தைகளை பலி கொடுக்க திட்டமிட்ட தம்பதியரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். ஜவுளி தொழில் செய்து வரும் இவருக்கு இரண்டு மனைவிகள். மூத்த மனைவி ரஞ்சிதாவுக்கு தீபக் மற்றும் கிஷாந்த் என்ற இரண்டு மகன்களும். இரண்டாவது மனைவி இந்துமதிக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இரண்டாவது மனைவி இந்துமதியின் தோழி சசி என்பவர் அடிக்கடி இந்துமதியை பார்ப்பதற்கு வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். அப்படி வரும்போது ராமலிங்கத்தின் மூத்த மனைவி ரஞ்சிதாவுக்கும், தோழி சசிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. ராமலிங்கத்தின் மூத்த மனைவி ரஞ்சிதாவும், தோழி சசியும் சிவனும் சக்தியும் போல இருப்பதாக கூறி இரண்டு குழந்தைகள் கண் முன்பாகவே ராமலிங்கமே இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும் சசியை அப்பா என்றும் தன்னை மாமா என்றும் அழைக்கும்படி குழந்தைகளிடம் கூறியுள்ளார்.

நாளாக, நாளாக பெற்ற மகன்கள் என்றும் பாராமல், தந்தை ராமலிங்கம் தாய் ரஞ்சிதா மற்றும் தோழி சசியுடன் சேர்ந்து சிறுவர்களை கொடுமை படுத்த ஆரம்பித்தனர். இரண்டு சிறுவர்களுக்கும் மிளகாய் பொடி சாப்பாடு வழங்குவது, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்யவைப்பது, உடலில் மிளகாய் பொடிபோட்டு மொட்டை மாடியில் வெயிலில் நிற்கச்சொல்வது, கழிவறையில் குழந்தைகளை படுக்க வைப்பது என கொடுமைபடுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் இரண்டு சிறுவர்களும் தூங்கி இருப்பார்கள் என்று நினைத்து ராமலிங்கம், ரஞ்சிதா மற்றும் சசி ஆகியோர் அவர்களை நரபலி கொடுத்து கடவுளிடம் ஒப்படைத்து விடலாம் பேசிக் கொண்டிருந்தனர். இதனைக் கேட்ட மூத்த மகன் தீபக் உயிருக்கு ஆபத்து கடிதம் எழுதிவைத்துவிட்டு,புளியம்பட்டியில் உள்ள தாத்தாவின் வீட்டில் சகோதரர்களுடன் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ராமலிங்கம் 2 குழந்தைகளையும் தங்களோடு அனுப்பிவைக்குமாறு மிரட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து இரு சிறுவர்களும் தாத்தாவின் உதவியுடன் பெற்றோர் கொடுமைபடுத்துவதாகக் கூறி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளளனர்.தங்களை கொடுமை படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்த சிறுவர்கள்

 

Comment

Successfully posted