மயிலாடுதுறையில் விமரிசையாக நடைபெற்ற காவிரி கடைமடைத் திருவிழா

Nov 16, 2019 03:15 PM 315

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி துலா உற்சவத்தின் கடைமுக திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

மயிலாடுதுறையில் ஆண்டுக்கொரு முறை காவிரி கடைமுக திருவிழா நடைபெறும்.காவிரியில் புனித நீராடினால் பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது மக்களின் நம்பிக்கையாக  உள்ளது. இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதிலிருந்து வரும் பக்தர்கள்  காவிரியில் புனித நீராடி சிவாலயங்களில் சென்று சாமி தரிசனம் செய்வர். துலா உற்வச நிகழ்ச்சியால் காவிரி கடைமுக பகுதி விழாக்கோலம் பூண்டுள்ளது. ஏராளமானோர் காவிரியில் புனித நீராடி வருகின்றனர். நீச்சல் வீரர்கள் படகில் சென்றவாறு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடைமுக திருவிழாவை ஒட்டி சிவாலயங்கள் விழாக்கோலம் பூண்டுள்ளன.

Comment

Successfully posted