7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

Jul 07, 2021 05:39 PM 665

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தின் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், 7 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிக்கையில், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில், இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted