பேரறிவாளனுக்கு 30 நாள் பரோல் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

Sep 24, 2020 10:21 PM 646

ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனுக்கு 30 நாள்கள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாள்கள் பரோல் வழங்க வேண்டும் என்று அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கொரோனாத் தொற்று காலத்தில் பேரறிவாளன் சிறையில் இருப்பதே பாதுகாப்பானது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, சிறைத்துறை விதிக்கும் நிபந்தனைகளுக்கு பேரறிவாளன் உட்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்ததோடு, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.

Comment

Successfully posted