சத்தீஸ்கர் மாநில சட்டபேரவைக்கான முதல்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது

Nov 10, 2018 03:52 PM 461

நாளை மறுநாள் சத்தீஸ்கர் மாநில சட்டபேரவைக்கான முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பணிகளில் தேர்தல் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நக்சல் ஆதிக்கம் பரவலாக காணப்படும் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 90 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் 18 தொகுதிகளுக்கான முதல்கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது.

இதற்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள், விரல் மை உள்ளிட்டவைகளை வாக்கு மையங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகளை தேர்தல் பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். நக்சல்கள் அச்சுறுத்தல் இருப்பதால் தேர்தல் பாதுகாப்பு பணியில் கூடுதல் வீரர்கள் ஈடுபட்டுள்ளதுடன் ரோந்து பணிகளை அதிகப்படுத்தியுள்ளனர்.

 

 

Comment

Successfully posted