முதலமைச்சரின் அறிக்கையே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு - அமைச்சர் ஜெயக்குமார்

Sep 21, 2020 04:12 PM 1642

சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையத்தை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை அவர் சந்தித்தார். அப்போது, காவிரி பிரச்னைக்கு யார் காரணம்? என்று கேள்வியெழுப்பிய அவர் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க வேண்டியது திமுகதான் என்று குறிப்பிட்டார். அத்துடன், 17 வருடங்கள் மத்தியில் ஆட்சியில் இருந்தபோதும் விவசாயிகளின் நலனில் ஒரு போதும் அக்கறை இல்லாத கட்சி திமுக தான் என்று அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மசோதாவை தமிழக அரசு ஒரு போதும் ஏற்காது எனவும் அமைச்சர் விளக்கமளித்தார். கட்சியின் கருத்துதான் எப்போதும் முதன்மையானது. விவசாய மசோதாவைப் பொருத்தவரை முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கை தான் கட்சியின் நிலைப்பாடு என்று ஜெயக்குமார் கூறியுள்ளார்.

Comment

Successfully posted