கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ஆலோசனை!

Apr 07, 2021 06:05 PM 611

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது. கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. பிரதமர் மோடி நாளை மாநில அரசுகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த வுள்ளார்.

இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக அரசு தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், டி.ஜி.பி. திரிபாதி மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழகத்தில் கொரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comment

Successfully posted