சீனாவில் நிலநடுக்கம் - 18 பேர் படுகாயம், ஆயிரக்கணக்கான வீடுகள் பலத்த சேதம்

Aug 14, 2018 01:34 PM 1159

சீனாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள யூனான்  (Yunnan) மாகாணத்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 5 ஆக பதிவான  இந்த நிலநடுக்கத்தால், 48 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கத்தில் சிக்கி  18 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.  ஜீவான் (Zhewan ) கிராமத்தில் 80 சதவீத வீடுகள் தரை மட்டமாகி உள்ளன.  பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நில நடுக்கம் ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

Related items

Comment

Successfully posted