வைரமுத்து எழுதிய பாடலை மேடையில் பாடிய சின்மயி...

Oct 14, 2018 09:48 PM 1564

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி எழுப்பிய பாலியல் புகாரால் உருவான பரபரப்பு இன்னும் ஓயவில்லை.

அதற்கு இன்று விளக்கம் கூட அளித்தார் வைரமுத்து. இந்நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல வணிக நிறுவனத்தில் இன்னிசை நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இதில் பின்னணி பாடகி சின்மயி கலந்து கொண்டு, பல்வேறு பாடல்களை பாடினார். இதில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வைரமுத்து எழுதி, தான் பாடிய ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை, சின்மயி மேடையில் பாடினார். 

சின்மயி திரைத்துறையில் முதன்முதலில் பாடிய பாடல் இதுவாகும். 

வைரமுத்து எழுத்தில், பல பாடல்களை அவர் பாடியுள்ளார். ஆனால் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சில பாடல்களை மட்டும் பாடி விட்டு, அதிகமான இந்தி பாடல்களை பாடினார். 

 

Comment

Successfully posted

Super User

வைரமுத்து கூழிக்கி எழுதியவர் அதோடு அவர் பணி முடிந்தது