மருத்துவ காப்பீட்டு தொகை அதிகரிப்பு - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Nov 30, 2018 10:46 PM 526

முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் சிகிச்சை பெறுவதற்கான காப்பீட்டுத் தொகை 2 லட்சம் ரூபாயில் இருந்து, 5 லட்சமாக உயர்த்தி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு, இதுவரை 1 கோடியே 58 லட்சம் பேருக்கு காப்பீட்டு அட்டை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இத்திட்டத்தில் இதுவரை சுமார் 27 லட்சம் பேர், சுமார் 5 ஆயிரத்து 133 கோடி ரூபாய் அளவிற்கு பயனடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ காப்பீடு திட்டத்தின் மூலம் பயன்பெறும் பயனாளிகளுக்கு, தற்போது 2 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வரும் நிலையில், பயனாளிகளின் கோரிக்கையை ஏற்று, 5 லட்சமாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் 1 ஆம் தேதியிலிருந்து முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் ஆண்டொன்றிற்கு 5 லட்ச ரூபாய் வரையிலான காப்பீடு தொகைக்கு, கட்டணம் இல்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

Comment

Successfully posted