வேலூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்

Jul 27, 2019 06:15 AM 553

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்குகிறார்.

வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. அதிமுக சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் போட்டியிடுகிறார். இந்தநிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக வாணியம்பாடி மற்றும் ஆம்பூரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரத்தை துவங்குகிறார். நாளை, கீழ்வைத்தியணான் குப்பம் மற்றும் குடியாத்தத்தில் முதல்வர் வாக்கு சேகரிக்கிறார். ஆகஸ்ட் 2ம் தேதி அணைக்கட்டு மற்றும் வேலூரில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொள்கிறார். அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அமைச்சர்கள், கூட்டணிக் கட்சியினர் தேர்தல் களத்தில் தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted