அனைத்து தொழில்களும் செழிக்க வேண்டும் - ஆயுதபூஜை, விஜயதசமியையொட்டி முதலமைச்சர் வாழ்த்து

Oct 17, 2018 05:47 PM 610

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளையொட்டி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நவராத்திரி விழாவையும், வெற்றித் திருநாளாம் விஜயதசமி திருநாளையும், நாடு முழுவதும் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட உள்ள இந்த மகிழ்ச்சியான தருணத்தில், அனைவருக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

நவராத்திரி நாளில், வாழ்வின் உயர்வுக்கு அடிப்படையான வீரம், கல்வி மற்றும் செல்வம் ஆகியவற்றை அருளும் அன்னையின் திருவருள் அனைவருக்கும் கிடைக்க பிரார்த்தனை செய்து கொள்வதாகவும் முதலமைச்சர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உணர்ந்து, மக்கள் தங்கள் தொழில்சார்ந்த கருவிகளை வணங்கிடும் இந்த நன்னாளில், மக்கள் தாங்கள் தொடங்கும் அனைத்து தொழில்களும் செழிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்த சிறப்புமிக்க திருநாளில், அன்னையின் அருளால் தமிழக மக்கள் அனைவரும், வாழ்வில் வெற்றிமேல் வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

Related items

Comment

Successfully posted

Super User

அருமை.நன் றி